கோண்டாவிலில் குடைச் சுவாமிகளின் குருபூசை


ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் வருடாந்தக் குருபூசை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (24.02.2026) கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய வளாகத்திலுள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று காலை-08 மணிக்குத் திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து முற்பகல்-10.30 மணியளவில் விசேட அபிஷேக, பூஜை வழிபாடுகள் நடைபெறும். குருபூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுமென மேற்படி ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.