தமது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து முறையான பதில் கிடைக்காததைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை (26.02.2026) நண்பகல்- 12 மணி முதல் மாலை-06 மணி வரை அடையாளப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட எட்டுக் கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை எவ்விதச் சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே நடந்த இருகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையிலேயே இன்றைய அடையாளப் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் ஏற்படக் கூடிய மின் விநியோகத் தடைகள் அல்லது ஏனைய அசௌகரியங்களுக்கு முழுப் பொறுப்பையும் வலுசக்தி அமைச்சரும், தற்போதைய அரசாங்கமுமே ஏற்க வேண்டுமென மின்சாரசபைத் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

