சாதாரணதரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!

2025 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று வியாழக்கிழமை (26.02.2026) நிறைவடையும் நிலையில் மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கடந்த காலங்களில் பரீட்சையின் இறுதி நாளில் மாணவர்கள் மத்தியில் மோதல்கள் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் இடம்பெற்றமையைக் கருத்திற் கொண்டு இம் முறை அத்தகைய அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுக்கத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சை நிறைவடைந்து வீடு திரும்பும் போது மாணவர்கள் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடாதிருப்பதை உறுதி செய்யுமாறும் பெற்றோர்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.