இணுவில் மண்ணில் சிறப்பிக்கப்படும் பேராசிரியர். தேவராஜாவின் பவளவிழா!



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத் துறையின் முதலாவது பேராசிரியர். கந்தையா தேவராஜாவின் பவளவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) பிற்பகல்-02.30 மணியளவில் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள விசேட மண்டபமான கந்தையா அன்னம்மா, இராசையா இராசம்மா அரங்கத்தில் தேவா பவளவிழாச் சபையின் ஏற்பாட்டில் வெகுசிறப்பாக இடம்பெறவுள்ளது. 

பவளவிழாச் சபைத் தலைவர் க.கனகராசா தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறும்.