கருவி நிறுவனத்தின் நடுவப் பணியகத் திறப்பு விழா

மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான கருவி நிறுவனத்தின் நடுவப் பணியகத் திறப்பு விழா இன்று புதன்கிழமை (20.05.2026)  காலை-09 மணி முதல் பூதர்மடம் ஒழுங்கை, நீர்வேலி தெற்குப் பகுதியிலுள்ள கருவி நிறுவன வளாகத்தில் கருவி நிறுவனத் தலைவர் கணபதி சர்வானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது. 

குறித்த நிகழ்வில் தொழிலதிபர் ஆர்.சிவலோகநாதன் பிரதம விருந்தினராகவும், கோப்பாய்ப் பிரதேச செயலாளர் ஈ. தயாரூபன், வடக்கு மாகாணச் சமூக சேவைத் திணைக்களப் பணிப்பாளர் திருமதி.தனுஜா லுக்சாந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் முகாமைத்துவக் கற்கைகள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், கருவி நிறுவனத்தின் ஐக்கிய இராச்சிய அறங்காவலர் சபைத் தலைவர் சிவாஜி சேகரம், ஆசிரியர் இரா.அருட்செல்வம், ஆசிரியை திருமதி.இந்திராணி விஜயராஜசிங்கம், மூத்த சமூகப் பணியாளர் கா.விஜயராஜசிங்கம் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.