முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் நேற்றுத் திங்கட்கிழமை (18.05.2025) தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பிரதான நினைவுநாள் நிகழ்வு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி நேற்றுக் காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து யாழ் நவக்கிரிச் சந்தியிலிருந்து மோட்டார்ச் சைக்கிள்களில் பேரணியை ஆரம்பித்து முள்ளிவாய்க்காலை அடைந்தனர்.
நேற்று முற்பகல்- 10.15 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவர் தவத்திரு.அகத்தியர் அடிகளால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து முற்பகல்- 10.29 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழினப் படுகொலை நினைவுத் தூபியில் பொதுச் சுடரேற்றப்பட்டுச் சமநேரத்தில் சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மத குருமார்கள், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள், சிவில்- சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந் திரளானோர் திரண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
.jpg)
.png)
.png)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
