81 வயதிலும் சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய முதியவர்!

தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் திங்கட்கிழமை  (23.02.2026) 81 வயதான முதியவரொருவர் பரீட்சை எழுதிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் கல்விக்கு வயது ஓர் தடையில்லையென அவர் நிரூபித்துள்ளார்.  

களுத்துறை மாவட்டம் கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த நிமல் சில்வா என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியவராவார்.