நல்லூரில் மகா சிவராத்திரி விழா

சிவகுரு ஆதீனம் நடாத்தும் மகா சிவராத்திரி விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (15.02.2026) மாலை-03 மணி முதல் மாலை-05 மணி வரை நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் இடம்பெறவுள்ளது.    

அபிஷேகம், பூஜை, பஜனை, ஆன்மீகச் சொற்பொழிவுகள் என்பன இடம்பெறும். அனைவரும் மகா சிவராத்திரி வழிபாடுகளில் கலந்து கொண்டு சிவனருளைப் பெற்றுய்யுமாறு  சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் கேட்டுள்ளார்.