யாழில் இரு நூல்களின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த் துறையின் 42 ஆம் அணி மாணவியும், தற்போதைய தற்காலிக உதவி விரிவுரையாளருமான முல்லை முகுந்தினியின் முள்ளிவாய்க்காலும் முட்கம்பி வேலியும், புயலடித்த தேசம் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை (23.02.2026) பிற்பகல்-02 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.   

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.