வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெரு விழாவின் சப்பரத் திருவிழா இன்று சனிக்கிழமை (17.08.2024) இரவு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சந்நிதி வேற்பெருமான் வீதி உலா வந்த காட்சி சிறப்பானது. இன்றைய சப்பரத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.