சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நலன்புரிச் சங்கத்தின் ஸ்தாபகருமான அமரர் மாமனிதர் சி.சிவமகாராசாவின் 18 ஆவது ஆண்டு நினைவு தினமும் பணியாளர் ஒன்றுகூடலும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (20.08.2024) காலை-09 மணி முதல் தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பணியாளர் நலன்புரிச் சங்கத் தலைவர் திருமதி.சு.கெளரிதேவி தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணம் கூட்டுறவுத் திணைக்கள அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் கூட்டுறவுத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.தனுஷன் சிறப்பு விருந்தினராகவும், தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் த.திருநாவுக்கரசு, அமரர் சி.சிவமகாராசா அறநிதியச் சபையின் தலைவரும், கூட்டுறவாளருமான ந.உமாகரன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.