சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீகச் சொற்பொழிவும் நிதி உதவி கையளிப்பும்

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (06.03.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி.ப.சிவனொளிபாதம் கலந்து கொண்டு ' பஞ்ச அட்சரம் ' எனும் தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். 

இதேவேளை, கோண்டாவிலிலுள்ள மூத்த பிரஜைகள் குழு முதியோர் சங்கத்தினரால் கொண்டாடப்படும் வருடாந்த முதியோர்கள் கௌரவிப்பு விழாவுக்காகச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் 35 ஆயிரம் ரூபா நிதி இந் நிகழ்வில் வைத்துக்  கையளிக்கப்பட்டது.