எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!

திங்கட்கிழமை (09.03.2026)  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளைச் சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 293 ரூபாவாகக்காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை 317 ரூபாவாகவும்,  340 ரூபாயாகக் காணப்பட்ட ஒக்டேன் 95 ரகப் பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை 365 ரூபாவாகவும், 281 ரூபாவாகக் காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுப் புதிய விலை 303 ரூபாவாகவும், 329 ரூபாவாகக் காணப்பட்ட லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றரொன்றின் புதிய விலை 24 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை 353 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை 195 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.