சுரபி கல்வி நுண்கலை நிறுவகத்தின் ஏற்பாட்டில் காகித விழா-2026 இன்று ஞாயிற்றுக்கிழமை (04.10.2026) பிற்பகல்- 01:30 மணி முதல் யாழ்.குட்டியப்புலம் பகுதியில் அமைந்துள்ள கரிசல் மண்டபத்தில் சுரபி கல்வி நுண்கலை நிறுவகத்தின் நிறுவனர் திருமதி.சுகிர்தினி பிரபு தலைமையில் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் மேனாள் சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கையின் முன்னணி நாடக மற்றும் அரங்கவியலாளருமான கலாநிதி க.சிதம்பரநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்வர்.



