வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 89 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (04.10.2026) காலை வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. மாலை- 03 மணி வரை இரத்ததான முகாம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 18 வயதிற்கு மேற்பட்ட 55 வயதிற்கு உட்பட்ட குருதிக் கொடை வழங்க விரும்பும் அனைவரும் வருகை தந்து குருதிக் கொடை வழங்க முடியும். இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடை வழங்கும் அனைவருக்கும் அழகான புத்தகப்பை வழங்கப்படும் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


