இன்றும், நாளையும் வடக்கின் பல பகுதிகளிலும் மின்தடை!

வவுனியா-மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இன்றும்,  நாளையும் மின்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, இன்று  வெள்ளிக்கிழமை நண்பகல்-12 மணி முதல் மாலை-06 மணி வரையும், நாளை சனிக்கிழமை நண்பகல்-12 மணி முதல் மாலை-06.30 மணி வரையும் யாழ். மாவட்டம்முழுவதும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன் மின் இணைப்பு உடனடியாக மீள வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மின்தடையைக் கருத்திற் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பணிகள் நிறைவடைந்தவுடன் மின் இணைப்பு உடனடியாக மீள வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மின்தடையைக் கருத்திற் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.