சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று ஆன்மீக உரை


சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஆன்மீக உரை நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (02.10.2026) முற்பகல்- 10:30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறைத் தலைவர் கலாநிதி.திருச்செல்வம் செல்வமனோகரன் கலந்து கொண்டு ' பக்தி வலையில் படுவோன் காண்' எனும் தலைப்பில் ஆன்மீக உரை நிகழ்த்துவார்.