மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்று (30.09.2026) நள்ளிரவு-12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விலைத் திருத்தங்களின் படி ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுப் புதிய விலை 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் விலை 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுப் புதிய விலையாக 392 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுப் புதிய விலை 528 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன்- 95 ரகப் பெற்றோல் 475 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 285 ரூபாவாகவும் மாற்றமில்லாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை மாற்றத்துக்கு ஏற்ப லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளை அதே விலைகளில் அதிகரித்துள்ளது.