வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை உற்சவம் இன்று புதன்கிழமை (30.09.2026) மாலை பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.
இன்று மாலை- 04 மணியளவில் சாயரட்சைப் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகும். மாலை- 04:15 மணியளவில் இரண்டாம் காலப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மாலை- 04:45 மணியளவில் வசந்த மண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து நல்லூர்க் கந்தன் உள்வீதி உலா வரும் திருக்காட்சி இடம்பெறும்.


