யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் தமிழறிஞர்- பேராசிரியர். சாலமன் பாப்பையாவின் நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை (30.09.2026) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். தி.வேல்நம்பி தலைமையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
தமிழறிஞரும், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா இந்த மாதம்-11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தனது-90 வது வயதில் தனது சொந்த மண்ணான மதுரையில் காலமானார். இந் நிலையில் அவரது நினைவைப் போற்றி அஞ்சலி நிகழ்வு யாழ்.மண்ணில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


