நல்லூரில் தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை சிறீலங்கா பொலிஸார் அகற்றியமையைக் கண்டித்துக் கண்டனப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (29.09.2026) மாலை- 04.30 மணியளவில் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவாலய முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தக் கண்டனப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.


