நயினாதீவில் நாய்களுக்கு இலவசக் கருத்தடைச் சத்திர சிகிச்சை நடமாடும் முகாம்

வேலணைப் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இன்று புதன்கிழமை (11.03.2026) நயினாதீவுப் பிரதேச சபையின் உப அலுவலகம், யாத்திரிகர் மடம் ஆகியவற்றில் பெண் நாய்களுக்கான இலவசக் கருத்தடைச் சத்திர சிகிச்சை நடமாடும் முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது.

விசர் நாய்க்கடி, வீதிவிபத்து மற்றும் நாய்த் தொல்லைகளிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்க நாய்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக இந்த இலவச நடமாடும் முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

எனவே, மேற்படி நிலையங்களுக்கு நயினாதீவு வாழ் மக்கள் தங்கள் வளர்ப்புப் பெண் நாய்களை நேரடியாகக் கொண்டு வந்து பயன்பெற்றுச் செல்லுமாறு வேலணைச் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினர் கேட்டுள்ளனர்.