எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை (10.03.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோக் கிராம் எரிவாயு 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3990 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோக் கிராம் எரிவாயு 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 1602 ரூபாவாகவும், 2.3 கிலோக் கிராம் எரிவாயு 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 750 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

