யாழ்.பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றுச் சாதித்த பார்வையற்ற மாணவன் கம்சிகன்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41 ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாளின் ஐந்தாவது அமர்வு நேற்று முன்தினம் புதன்கிழமை (07.10.2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போது யாழ்.விழிப்புலனற்றோர் சங்கத்தைச் சேர்ந்த சிவமோகன் கம்சிகன் கலைத் துறையில் பொதுக் கலைமாணிப் பட்டம் பெற்றுச் சாதித்துள்ளார். 

குறித்த மாணவன் பட்டம் பெறும் போது சபையில் பலத்த கைதட்டல் ஓசை எழுந்தது.