யாழ்ப்பாணம் - கருவி மாற்றுத் திறனாளிகள் வள நிலையத்தின் உற்பத்திப் பொருள்கள் நல்லூர் முன் வீதியில் உள்ள சிறிய நடமாடும் காட்சிக் கூடமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு கருவி நிறுவனத்தினால் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படுகின்ற கருவி திரவ சைன் சலவை சவர்க்காரம், கருவி ஊதுபத்தி உள்ளிட்ட பொருள்களும் கருவி அங்கத்தவர்களின் பனை சார்ந்த உற்பத்திப் பொருள்களும், கைவினைப் பொருள்களும் விற்கப்பட்டு வருகின்றன.
கருவி நிறுவனத்தின் சொந்தக் கட்டிட நிர்மாணப் பணிகள் நீர்வேலி பூதர்மட பகுதியில் இடம்பெற்று வருகின்றது. அதற்கான நன்கொடையினையும் காட்சிக் கூடத்தில் வழங்க முடியும். குறித்த கட்டிட வேலைகள் தொடர்பிலான விபரங்களையும் குறித்த காட்சிக் கூடத்தில் பார்வையிட முடியும். கருவி நிறுவனத்தினால் வெளியிடப்படுகின்ற வலு சஞ்சிகையினையும் குறித்த காட்சிக் கூடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
இத்தகவல்களை கருவி மாற்றுத்திறனாளிகள் சமுகவள நிலையத்தை சேர்ந்த திரு.க.தர்மசேகரம் அவர்கள் தெரிவித்தார்.