தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நல்லூர் ஆலய முன் வீதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தலும், மக்களுக்கான நேரடி பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த புதன், வியாழக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட பிரச்சார பணிகளில் பல்வேறு தமிழ் சிவில் சமூக அமைப்புகளில் இயங்கும் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
மக்கள் பலரும் ஆர்வமுடன் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் துண்டுப்பிரசுரங்களையும் வாங்கி சென்றனர்.