மருதனார்மடம், சுன்னாகத்தில் கையெழுத்துப் போராட்டம்

சிறிலங்காவின் சிறைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு - கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும்,  முன்னாள் போராளிகளும் இணைந்து நடாத்தும் கையெழுத்துப் போராட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (07.01.2025) காலை-07 மணியளவில் மருதனார்மடத்திலும், காலை-08 மணியளவில் சுன்னாகத்திலும் இடம்பெறும்.