யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை (02.01.2025) எலிக் காய்ச்சலால் இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 23 வயது மற்றும் கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த 53 வயதுடையவர்களாவார். இருவரும் முறையே 72 மணி நேரம் மற்றும் 48 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனர். இருவரும் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தனர். போதிய சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இறப்பு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.