அநுர அரசாங்கம் மரணப் பொறிக்கு உள்ளேயா? வெளியேயா?: கொக்குவிலில் அரசியல் உரை அரங்கு

சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே ரணில் அரசாங்கத்துடன் செய்து கொண்ட கடன் ஒப்பந்தம் நாட்டிற்கு 'மரணப் பொறி' எனக் கூறிய அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் இந்தப் பொறிக்கு உள்ளேயா? அல்லது வெளியேயா? எனும் தலைப்பிலான அரசியல் உரை அரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05.01.2025) மாலை- 03.30 மணி முதல் கே.கே.எஸ்.வீதி, கொக்குவில் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. 

மூத்த பொதுவுடைமைவாதி சி.கா.செந்திவேல் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த உரை அரங்கு நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் டேவிட் சுரேன், பொருளியியல் ஆய்வாளர் கல்ப ராஜபக்ச, தொழிற்சங்கச் செயற்பாட்டாளர் மாக்ஸ் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள்  ஆற்றுவர். கருத்துரைகளைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் நடைபெறும். 

இந் நிகழ்வில் அரசியல் ஆர்வமுடையோர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.