கோண்டாவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் சாலைக்கும், திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்திற்கும் இடையில் கடந்த செப்ரெம்பர் மாதம்-02 ஆம் திகதி தவறவிடப்பட்ட பெறுமதியான தங்க ஆபரணம் இதுவரை யாரும் பொறுப்பேற்காமையால் சமூக ஆர்வலர் ஒருவரால் கோண்டாவில் கிழக்கு ஶ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் இணைந்த குமரன் விளையாட்டுக் கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உரியவர்கள் தகுந்த ஆதாரங்களைக் காட்டி எதிர்வரும் மார்ச் மாதம்-15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தங்க ஆபரணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு 0778480615 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.