நாடாளுமன்றத்தை ஜனவரி-07ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜனவரி-07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-09.30 மணி முதல் முற்பகல்-10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து முற்பகல்-10.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கை-2024 தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவிருப்பதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.