பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மயிலிட்டியில் மாபெரும் போராட்டம்

36 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்கின் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரிக் காணி மீட்புப் போராட்டம் கடந்த மாதம்- 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.மயிலிட்டியில் ஆரம்பமாகி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமையும் (29.05.2026) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணிவரை ஆறாவது வாரமாக மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்துக்கு முன்பாக மாபெரும் போராட்டம் நடைபெறும்.

இதேவேளை, எமது காணிகளை மீட்க ஒவ்வொரு குடும்பங்களிலிருந்தும் குறைந்தது ஒருவராவது பங்கேற்று இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.