ஞானச்சுடர் வைகாசி மாத இதழ் வெளியீடு இன்று

சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் 341 ஆவது வைகாசி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (29.05.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.    

இந் நிகழ்வில் சைவப்புலவர் திருமதி. அமிர்தகலா சுதர்சன் மலரின் வெளியீட்டு உரையையும், ஆசிரியர் துரை கணேசமூர்த்தி மலரின் மதிப்பீட்டு உரையையும் ஆற்றுவர்.