சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை அரங்கம்

சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப் பேரவையின்  ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாகத் தெய்வீக இசை அரங்கம் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15.05.2026) முற்பகல்-10.45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.  

மேற்படி நிகழ்வில் வேல்மாறன் சாருமதி, வேல்மாறன் சாரங்கி ஆகியோர் இசைக் கலைமணி. நடேசு செல்வச்சந்திரன் குழுவினருடன் இணைந்து வழங்கும் தெய்வீக இசை அரங்கம் நடைபெறுமெனச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.