சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 38 ஆவது ஆண்டு நிறைவு விழா


சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 38 ஆவது ஆண்டு நிறைவு விழா 17.05.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

கோகிலா மகேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் விருந்தினர்களாக வைத்தியர் திருமதி முல்லை பரமேஸ்வரன் அவர்களும்,பேராசிரியர் க. சிறீகணேசன் அவர்களும், எழுத்தாளர் திருமதி புனிதவதி சண்முகலிங்கம் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.  

குறித்த நிகழ்வில் தனித்துவ ஆளுமைப் பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும், விழிசைச் சிவம் விருதுகள் வழங்கலும், 

சோலைக்குயில் உறுப்பினர்களான  மாவை பாரதியின்  "மந்தமாருத பவனி" பாடல்கள் நூலும், கவிதாமலர் சுதேஸ்வரனின் "மாற்றங்கள்" கவிதைத் தொகுதி நூலும், தமிழ்மகளின் "பார்க்காத பக்கங்கள்" சிறுகதைத் தொகுதி ஆகிய மூன்று நூல்களினதும் அறிமுக நிகழ்வு இடம்பெறும். 

தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.