வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையும் கோப்பாய்ப் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை(22.12.2022) மேற்படி பிரதேச செயலகப் புதிய மாநாட்டு மண்டபத்தில் சாகித்திய ரத்னா நீர்வை பொன்னையன் அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த ஆண்டு வலிகாமம் கிழக்குப் பண்பாட்டுப் பேரவைக்கென மாதிரி விருது உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த விருதே இந்த வருடம் முதல் பண்பாட்டுப் பெருவிழாவில் இளம், மூத்த கலைஞர்களுக்கு வருடாந்தம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி மாதிரி விருதை உருவாக்கிய உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்ட சிற்பக் கலையில் சிறப்புப் பெற்ற இளம் கலைஞர் செல்வகுமார் திலக்சன் விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட மேலதிக அராசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரனால் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார்.
(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)