கோண்டாவிலில் நாளை கால்கோள் விழா

யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களைப் பாடசாலைக்குள் இணைத்துக் கொள்ளும் வைபவ ரீதியான கால்கோள் விழா நாளை செவ்வாய்க்கிழமை(28.03.2023) காலை-08.30 மணி முதல் மேற்படி பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் நடைபெற உள்ளது.

மேற்படி பாடசாலையின் அதிபர் இ.ஹஸ்ரன் றோய் தலைமையில் இடம்பெற உள்ள நிகழ்வில் கோண்டாவில் வடகிழக்கின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுகிர்தா விஷ்ணுரஞ்சன் பிரதமவிருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.