குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் செல்லப்பா சுவாமிகளின் 108 ஆவது ஆண்டு குருபூசை நிகழ்வு

       

நல்லூர்த் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் 108 ஆவது ஆண்டு குருபூசை நிகழ்வு குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை(24.03.2023) இடம்பெற்றது.

காலை-10 மணி முதல் திருமுறைப் பாராயணம், நற்சிந்தனைப் பாடல் ஓதப்பட்டு அதனைத் தொடர்ந்து ஆச்சிரமத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமான், சிவலிங்கப் பெருமான் மற்றும் செல்லப்பா சுவாமிகளின் திருவுருவப் படத்திற்கும் விசேட பூசை, தீபாராதனை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன.


(செ.ரவிசாந்)