மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் பங்குனித் திங்கள் உற்சவத்தில் மெய்சிலிர்க்க வைத்த அடியவர் !


வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் இரண்டாம் பங்குனித் திங்கள் உற்சவம் இன்று திங்கட்கிழமை(27.03.2023) சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பல ஆண் அடியவர்கள் பறவைக் காவடிகள் எடுத்துத் தமது நேரத்திக்  கடன்களை நேர்த்தியுடன் நிறைவு செய்தனர்.

இதன்போது புத்தூர் அண்ணமார் கோவிலடியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உடலின் பல பகுதிகளிலும் பெரிய முள்ளுகள் குத்திப் பறவைக் காவடி எடுத்து வந்த காட்சி ஆலயத்தில் திரண்டிருந்த அடியவர்கள் மற்றும் வீதியால் சென்ற பொதுமக்கள் பலரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்ததுடன் மெய் சிலிர்க்கவும் வைத்தது.



(செ.ரவிசாந்)     

   













.