உலகப் புகழ்பெற்ற கலைஞன் வாகீசனுக்கு யாழில் மாபெரும் கெளரவிப்பு விழா

உலகப் புகழ்பெற்ற கவித்துவக் கலைஞன் வாகீஸ்வரனைக் கெளரவித்து இணுவில் கலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கெளரவிப்பு விழா இன்று சனிக்கிழமை (20.12.2025) மாலை-04.30 மணியளவில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையப் பிரதி விவசாயப் பணிப்பாளர் அழகேசன் அமிர்தலோஜனன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்  செஞ்சொற் செல்வர்.கலாநிதி.ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாத்திய இசைத்துறை விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கோபிதாஸ்,  யாழ்.காரைநகர் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் இராசலிங்கம் கிருஷ்ணராஜ், யாழ். ஊரெழு கணேசா வித்தியாசாலையின் ஆசிரியர் திலீபன் கார்த்திகா,  இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத் திருநெறிய தமிழ்மறைக் கழகத்தின் தலைவர் சண்முகநாதன் முகுந்தன், நாதஸ்வர வித்துவான் என்.ஆர். கோவிந்தசாமி இரத்தினகுமார், நாடகக் கலைஞர் நாகையா கிருபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதேவேளை, இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.