யாழில் இடம்பெறவுள்ள கலாபூஷணம் கோகிலா மகேந்திரன் அவர்களின் பவளவிழா

 


கலாபூஷணம் கோகிலா மகேந்திரன் அவர்களின் பவளவிழா நிகழ்வுகள் எதிர்வரும் 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இராமநாதன் வீதி  (ராஜா கிறீம் ஹவுஸ்) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு மங்கள விளக்கேற்றல், நாதசங்கமத்துடன் ஆரம்பமாக உள்ளது.

ஆசியுரையினை கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களும், கவி வாழ்த்தினை கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களும், வாழ்த்துரையினை ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், தொடக்கவுரையினை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும் வழங்கவுள்ளனர்.

தொடர்ந்து பவளவிழா நூல் வெளியீடும், அதனைத் தொடர்ந்து "போலச் செய்தல்" நடிப்பு அளிக்கையும் இடம்பெறவுள்ளது.

உன்னத ஆளுமையாளராக கோகிலா மகேந்திரன் அவர்கள் பெரிதும் வெளிப்படுவது கல்வியலாளராகவே, எழுத்தாளராகவே, உளவியலாளராகவே, நாடக வல்லுநராகவே எனும் பட்டி மண்டபம் பேராசிரியர் சி. சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து வான்விளிம்பில் ஒரு நட்சத்திரம் எனும் நாடகமும், கோகிலா மகேந்திரன் அவர்களின் ஏற்புரையுடனும், வைத்தியர் சிவரூபி அவர்களின் நன்றியுரையுடனும் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெறும்.  

இந்நிகழ்வுக்கு எழுத்தாளர்கள், உளவளத்துணையாளர்கள், கல்வியலாளர்கள், வாசகர்கள், மாணவர்கள் அனைவரையும் பங்கேற்று சிறப்பிக்குமாறு பவளவிழா குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.