சுன்னாகம் தாளையடி ஐயனார் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்

யாழ்.சுன்னாகம் தாளையடி ஐயனார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(26.03.2023) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பதின்மூன்று தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக நடைபெற உள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் அடுத்தமாதம்-02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் வேட்டைத் திருவிழாவும், 03 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை-06.30 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-08.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், 05 ஆம் திகதி புதன்கிழமை காலை-08.30 மணியளவில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை  கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்துள்ளனர்.


(செ.ரவிசாந்)