இன்று புதன்கிழமை(29.03.2023) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைவடைய உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 340 ரூபாவிற்கும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 375 ரூபாவிற்கும், ஒட்டோ டீசல் 80 ரூபாவினால் குறைக்கப்பட்டு 325 ரூபாவிற்கும், சுப்பர் டீசல் 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 465 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 295 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.