இணுவில் சிவகாமி அம்பாள் ஆலய வரலாற்றுப் பதிவுகள் நூல் வெளியீட்டு விழா

கலாபூஷணம் மூ.சிவலிங்கம் எழுதிய இணுவில் சிவகாமி அம்பாள் ஆலய வரலாற்றுப் பதிவுகள் நூல் வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை(30.03.2023) மாலை-03 மணி முதல் இணுவில் சிவகாமி அம்பாள் ஆலயத் திருமண மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.கந்தையா ஸ்ரீகணேசன் தலைமையில் நடைபெற உள்ளது.

மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதி கலாநிதி.சுகந்தினி சிறிமுரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.