ஈழத்துச் சித்தர்களின் பரம்பரையில் மிகவும் முக்கியமானவராகத் திகழும் யோகர் சுவாமிகளின் 59 ஆவது ஆண்டுக் குருபூசையை முன்னிட்டு நாளை வியாழக்கிழமையும்(30.03.2023), நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும்(31.03.2023) நல்லூர்த் தேரடி யோகர் சுவாமிகளின் தொண்டர்களும், அடியவர்களும் இணைந்து விசேட நற்சிந்தனைப் பாராயண நிகழ்வு நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மட அம்பலவாணர் மண்டபத்தில் காலை-08 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை நடைபெற உள்ளது.
குறித்த பாராயண நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற முடியும் எனவும், மேலதிக தகவல்களுக்கு 0770365845 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(செ.ரவிசாந்)