அந்நியத்தின் விலாசம் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் புத்தகக் கண்காட்சியும்

இலக்கியக் குவியத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் சிவசேகரனின் அந்நியத்தின் விலாசம் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அடங்கிய நூலின் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(26.03.2023) பிற்பகல்-02.30 மணியளவில் 286, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்றக் கலைத்தூதுக் கலையகத்தில் கவிஞர் வ.வடிவழகையன் தலைமையில் இடம்பெற உள்ளது.

மேற்படி நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், கவிஞருமான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், மருதங்கேணிப் பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர்.    

அத்துடன் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நாளை பிற்பகல்-02 மணிக்கு மேற்படி கலையகத்தில் ஆரம்பமாகி நடைபெறும்.  இதன்போது அனைத்து நூல்களுக்கும் 20 வீத விலைக் கழிவு வழங்கப்பட உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)