யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய இன்று காலை 10.50 மணியளவில் அளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட ஏர்லையன்ஸ் ஏர் விமானம், யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் தரையிறங்கியுள்ளது.
இதனையடுத்து மீண்டும் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது 2019 ஒக்டோபர் மாதம் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.