சிறப்பிக்கப்பட்ட மல்லாகம் மகா வித்தியாலய ஒளி விழா

 


யாழ்.மல்லாகம் மகா வித்தியாலயத்தின் ஒளி விழா நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை(21.12.2022) முற்பகல்-11 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் வித்தியாலய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி.வாசுகி சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்ற விழா நிகழ்வில் குளமங்கால் பங்குத் தந்தை அருட்பணி எஸ்.பாஸ்கரன் அடிகள் பிரதம விருந்தினராகவும், மல்லாகம் மகா வித்தியாலய ஓய்வுநிலை முன்னாள் அதிபர் திருமதி.யோகராணி தில்லைநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் நத்தார் தாத்தா நடனம், கரோல் கீதம் உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)