லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அடுத்த மாத ஆரம்பத்தில் மீண்டும் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் விலைச் சூத்திரத்துக்கு அமைய எரிவாயு விலை திருத்தப்படுகிறது.
இந்த மாதம்-04 ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது. இதன்படி, 12.5 கிலோக் கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டுத் தற்போது 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.