வவுனியா ஓமந்தைப் பகுதியில் டிப்பருடன் கார் மோதிக் கோர விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுக் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் யாழ்.இந்தியத் துணைத் தூதரக கலாசார அதிகாரி சிவஶ்ரீ.சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரனின் மைத்துனர் (மனைவியின் சகோதரர்) து.சுவாமிநாத ஐயர் (சந்திரன் ஐயா) இன்று வெள்ளிக்கிழமை (20.06.2025) அதிகாலை-12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் குருக்கள் பரம்பரையைச் சேர்ந்த இவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22.06.2025) காலை-07.30 மணியளவில் 7/9A, பண்டாரக்குளம் மேற்கு ஒழுங்கை, கோவில் வீதி, நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காகப் பூதவுடல் முற்பகல்- 10 மணியளவில் யாழ் செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.